தோழர் போல் சத்தியநேசன் லண்டனில் காலமானார்!!!

TIBன் நீண்டகால உறுப்பினர் திரு போல் சத்திய நேசன் அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை (5/7/24) லண்டனில் காலமானார்  என்பதை மிகுந்ததுயரத்துடன் அறியத்தருகிறோம்.

இவர் முன்நாள் பிரித்தானியா நியூஹாம் நகரசபை உறுப்பினர் என்பதுடன், சபையின் தலைவராகவும் பணியாற்றியவர்.

மிகநீண்டகாலம் பிரித்தானியாவாழ் தமிழர்கள் நலன் பேணும் செயல்ப்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார்.மேலும் அகதிகள் அமைப்புக்களின் செயல்ப்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு செயலாற்றி அகதிகள் வாழ்வில் மீட்சியை ஏற்படுத்திவந்தவர்.

அமரர் போல்சத்திய நேசனிற்கு அஞ்சலிகளைத்தெரிவித்துக்கொள்வதுடன்,
அவரது மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களிற்கும் TIB ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறது.